
- சூலூர் அருகே கல்லூரி மாணவர் பள்ளி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.!
சூலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் மற்றும் பள்ளி மாணவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.கோவை மாவட்டம் சூலூர் அன்னமடை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜய் 21. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் ௨ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அஜய் சூலூர் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் ராசிபாளையம் பகுதியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்து உள்ளார்.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் இருவரும் மனமுடைந்து காணப்பட்டு வந்து உள்ளனர்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அஜய் மற்றும் பள்ளி மாணவி ஆகியோர் நேற்று மாலை ராசிபாளையம் ரயில்வே கேட் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை ரயில்வே போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.