நேற்றைய முன் தினம் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்க நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மதுரை எம் பி சு வெங்கடேசன் பேசி உள்ளார்.
மதுரை எம் பி சு வெங்கடேசன் பேசுகையில் “17 வது நாடாளுமன்றத்தின் கடைசி நாளில் பிரதமர் இந்த அவையில் பேசிய பேச்சை நான் நினைவுபடுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன். தேர்தலுக்குப் பின் இந்த அவையில் எதிர்க்கட்சிக்கு இடமில்லை பார்வையாளர் மடத்தில் தான் எதிர் கட்சிகளுக்கு இடம் என்று கூறியிருந்தார். மேலும் பிரதமரின் அன்றைய பேச்சு முழுக்க முழுக்க அயோத்தியை பற்றி இருந்தது. ஆனால் இன்றைக்கு குடியரசுத் தலைவரின் உரையில் அயோத்தி என்ற சொல்லே இல்லை.
உங்களுக்கு வாக்களிக்காவிட்டால் அயோத்தியை கைவிடுங்கள், ஆண்டவடையும் கைவிடுங்கள் என்பதுதான் குடியரசு தலைவரின் உரையின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு சொல்ல வந்த செய்தி. கோயில்களில் வாக்குச்சாவடியில் வாசலாக பாஜக பார்க்கின்றனர், கோவில்கள் வாக்குச்சாவடிகள் வாசல்கள் அல்ல, அது ஆன்மீகத்தின் உறைவிடம் என்பதை உங்களுக்கு சொல்லி இருக்கிறார்கள் அயோத்தி மக்கள். இங்கே அமைச்சர்கள் எல்லாம் பேசினார்கள் மீண்டும் செங்கோலோடு எங்களது பிரதமர் மோடி நாடாளுமன்ற அமைக்கும் நுழைந்து இருக்கிறார் என்று, அமைச்சர்கள் பெருமையோடு பேசி உள்ளனர்.
செங்கோல் .மணிமுடி, சிம்மாசனம் இதையெல்லாம் தகர்த்துவிட்டு தான் இந்திய ஜனநாயகம் இந்த அவையிலேயே கால் ஊன்றியது, மன்னராட்சி எப்பொழுது ஒழிந்ததோ அப்பொழுது செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டது. செத்துப்போன சிங்கத்தின் தோலை போர்த்திக்கொண்டு காட்டுக்கு ராஜா நான் தான் என்று நீங்கள் கதையடித்துக் கொண்டு உள்ளீர்கள். உங்களுக்கு தெரியுமா..? இந்த செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தாக்ன் என்று இந்த செங்கோலை கொண்டு வந்து இந்த இடத்தில் வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..? வேதனையாக உள்ளது ”,என்று அவர் கூறியுள்ளார் .செங்கோல் குறித்து இவரின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.