செங்கோட்டையின் தலைமையில் தான் அதிமுக..!! பரபரப்பை ஏற்படுத்திய திமுக அமைச்சர்..!!

சமீப காலத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் பாஜகவில் இணைவதாக செய்தி பரவியது. இதற்கு அப்போதே அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். அப்போதும் இந்த புகைச்சல் ஓயவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திமுக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில் “தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையின் தலைமையில் செல்ல போகிறதா..? வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா..? என்பது தெரியும். அதிமுக-வில் பாஜக பிளவு ஏற்படுத்துகிறது. எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். செங்கோட்டையன் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால் அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாகுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதை நாங்கள் செய்ய மாட்டோம் ஆனால் பாஜக நிச்சயம் செய்யும்”, என்று பரபரப்பாக பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் “45 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இது மற்ற கட்சியை சார்ந்தவர்களுக்கு தெரியும். சட்ட அமைச்சர் என்னை குறித்து கூறிய கருத்து வருத்தத்தக்க ஒன்று. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிந்து, புரிந்து இதுபோன்ற கருத்துக்களை வெளிபடுத்திருக்க வேண்டும் .என்னை பொறுத்தவரை மற்றவர்கள் கூட அரசியல் வாழ்க்கையில் குறை கூறாமல் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று கொண்டுள்ளேன். அதிமுக தொண்டர்களுக்கு என்றைக்குமே நான் தூணாக நின்று செயலாற்று இருக்கிறேன் எனவும் தெளிவுபடுத்துகிறேன்”, என கூறியுள்ளார்.

Read Previous

கஞ்சா விற்பனையாளருக்கும் காவல்துறையினரும் கூட்டணியா..? கஞ்சா குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதா..? அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!!

Read Next

சூடு பிடிக்கும் இந்திய தேர்தல் களம்..!! மும்பையில் பிரதமர் மோடி இன்று வாகன பேரணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular