செட்டிநாடு இனிப்பு பணியாரம் என்றாலே அதற்கான சுவை தனிதான் செட்டிநாடு சமையல் என்றாலே அதற்கான தனி பிரியர்களும் உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் செட்டிநாடு இனிப்பு பணியாரம் செய்வதை பற்றி இங்கு காண்போம்…
தேங்காய் துருவலுடன் காய்ந்த ஏலக்காய் முந்திரி வெந்தயம் சேர்த்து நீர் விடாமல் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும் முடிந்தவரை உரலில் அழைத்துக் கொள்ள வேண்டும் உரல் இல்லாத பட்சத்தில் மிக்ஸியில் பதமாக அரைத்துக் கொள்ள வேண்டும், மேலும் அதனுடன் பனைவெல்லம் பச்சை அரிசி உளுந்து சேர்த்து மீண்டும் அரைத்து எடுக்கவும் பதமான முறையில், இதனை தொடர்ந்து தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும், ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு சூடான குழி பணியார கல்லில் நெய் தேய்த்து நெய் காய்ந்ததும் இந்த மாவை ஊற்றவும் பொன்னிறமாக மாறும் வரை இரு பக்கமும் அவற்றை திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான செட்டிநாடு குழி பணியாரம் ரெடி, இதனை சுவைக்க சுவைக்க செட்டிநாடு இனிப்பு பணியாரம் எவ்வளவு சாப்பிட்டோம் என்று நம நமக்கே தெரியாது என்கிறார்கள்..!!




