செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் மசாலா..!! எளிதாக செய்வது எப்படி?..

சிக்கன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இறைச்சி வகைகளில் ஒன்று. அத்துடன் இந்த இறைச்சியை யார் வேண்டுமென்றாலும் வாங்கி சாப்பிடலாம்.

சிக்கன் என்றாலே அதனை சுவை தான் அதிகமாக ஞாபகத்திற்கு வரும். சிக்கன் சமைக்கும் போது அது ஒவ்வொரு இடத்திற்கு கேற்ப சமைக்கும் விதம் வேறுப்படும்.

அப்படி அசைவ பிரியர்களை கட்டிப்போடும் விதம் தான் செட்டிநாடு ஸ்டைல்.

இந்த ஸ்டைலில் வீட்டில் சமைத்தால் உங்கள் வீட்டில் உங்கள் சமையலை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். பண்டிகை தினங்களில் இந்த சிக்கன் ரெசிபியை செய்து பார்க்கலாம்.

அந்த வகையில் பலரின் நெஞ்சங்களை கொள்ளைக் கொண்ட செட்டிநாடு ஸ்டைலில் எப்படி சிக்கன் சமைக்கலாம் என்பதனை தொடரந்து பதிவில் பார்க்கலாம்.

செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் மசாலா

மரினைட் செய்ய தேவையானவை

  • சிக்கன் – 1 கிலோ
  • தயிர் – 1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்

வெங்காய விழுது அரைக்க தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம் – 3
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி – 1 துண்டு
  • பூண்டு பற்கள் – 10
  • கொத்தமல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கருப்பு மிளகு – 10 தேங்காய்

விழுது அரைக்க தேவையானவை

  • துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்

தாளிக்க தேவையானவை

  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • பிரியாணி இலை – 1
  • பட்டை – 1
  • ஏலக்காய் – 2
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • கிராம்பு – 3
  • கறிவேப்பிலை – சிறிதளவு

மற்ற பொருட்கள்

  • பெரிய வெங்காயம் – 1
  • பழுத்த தக்காளி – 1 பூண்டு
  • பற்கள் – 5
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு சிக்கன் எடுத்து அதனை தண்ணீரில் நன்றாக கழுவிய பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் ஆகிய பொருட்களை போட்டு நன்றாக சிக்கனுடன் கலந்து எடுக்கவும். அதனை சுமாராக 1 மணி நேரம் ஊற வைத்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.

அரைப்பதற்கு தேவையான பொருட்களை சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும். அதே ஜாரில் தேங்காயுடன் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களையும் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பெரிய அளவு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க தேவையான பொருட்களை பொட்டு தாளிக்கவும். தாளிப்பு வாசம் பக்கத்து வீட்டு வரை செல்ல வேண்டும். அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.

வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்திருக்கும் கலவையை கொட்டி கலந்து விடவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் ஒன்று பின் ஒன்றாக சேர்க்கவும்.

இந்த கலவை தயாரானதும் மசாலாவில் பிரட்டி வைத்திருக்கும் கோழியை மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு எண்ணெய் கடாயில் கொட்டவும். அதனை 5 நிமிடங்கள் வரை எண்ணெயுடன் கலந்து கொள்ளவும்.

பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கொட்டி, தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மூடிப் போட்டு வேக வைக்கவும். இறுதியாக கோழி வெந்தவுடன் கொத்தமல்ல தழை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் மசாலா தயார்! சூடான சாதம் செய்து இந்த சிக்கன் மசாலாவுடன் பரிமாறலாம்.

Read Previous

உலகின் உயரமான, குள்ளமான பெண்கள் சந்திப்பு..!! கின்னஸ் உலக சாதனை நாள்..!!

Read Next

உங்களுக்கு சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular