“செத்து செத்து விளையாடுவோமா டயலாக் புகழ் முத்துக்காளை” பெரிய படிப்பாளியாக மாறியதற்கு வடிவேலு தான் காரணமா.?

முரளி நடித்த “இரணியன்” படத்தில் அறிமுகமானவர் முத்துக்காளை. இதைத் தொடர்ந்து பிரபு நடித்த “பொன்மனம்” படத்தில் ஒரு சிறிய காமெடி வேடத்தில் நடித்த  முத்துக்காளை கிட்டத்தட்ட 240 படங்களுக்கு மேல் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

முத்துக்காளை கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார், இவர் ஆரம்பத்தில் ஸ்டென்த் மாஸ்டராக வேண்டும் என்ற கனவில் தான் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார், பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருந்தாலும் வடிவேலுவின் ஏராளமான படங்களில் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

“என் புருஷன் குழந்தை மாதிரி” படத்தில் இவர் பேசிய “செத்து செத்து விளையாடுவோமா..?” என்ற டயலாக்  இவரை மேலும் பிரபலமாகியது. சில மாதங்களுக்கு முன் இவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் தற்போது இவர் தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும் வரலாற்றில் இளங்கலையும், தமிழில் முதுகலையும் முடித்துள்ள முத்துக்காளை தனது பி.லிட் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கான பலரும் முத்துக்காளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு வடிவேல் தான் காரணம் என்றும் இதனால் தான் முத்துக்காளை இந்த அளவிற்கு சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் படித்துள்ளார் என்றும் திரைத்துறை வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Read Previous

“எனக்கு சிம்பு தான் ரொம்ப பிடிக்கும், அவருடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன்” ஜோதிகா ஓபன் டாக்..!!

Read Next

கவர்ச்சி தூக்கலான கடற்கரை உடையில் காட்சி தந்த ரகுல் ப்ரீத் சிங்..!! லேட்டஸ்ட் கிளிக் இதோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular