
அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பரான கோவையை சேர்ந்த அரவிந்த் என்பவர் வீட்டில் மீண்டும் வருமானத்தை வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஐந்து நாட்களாக சோதனை நடத்தி உள்ளனர்.
இதனை அடுத்து தற்போது கோவை கோல்ட் விண்ட்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகம், அதே போல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் என்பவர் வசிக்கும் பிரிக்கால் அடுக்குமாடி குடியிருப்பு, சௌரிபாளையம் பகுதி உள்ள அரவிந்த் அலுவலகம், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரவிந்தின் மனைவி காயத்ரி நடத்தி வரும் போதை மறுவாழ்வு மையத்தில் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு அலுவலகங்களுக்கு சீல் வைத்து உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று மீண்டும் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பிரிக்கால் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் அரவிந்த் என்பவர் வீட்டில் ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வந்தனர்.