
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினர் சட்டவிரோத பண பரிவர்த்தனை ஈடுபட்டதாக கூறி கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அதிகாலை கைது செய்தனர், கைது நடவடிக்கையின் போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரது ரத்தக்குழாயில் அடைப்பு இருந்த காரணத்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்,
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை வருகின்ற 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சென்னை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளார், இதை தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் உள்ளார், இதை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி அமலாக்கத்துறை தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர், ஏற்கனவே பணம் மோசடி பிரிவில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் தடுப்பு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.