சென்னையில் அரசு மருத்துவர் மீது தாக்குதல் விரிவான விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!

மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன் என்று மு க ஸ்டாலின் கூறியுள்ளார்…

சென்னையில் அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய வட மாநில இளைஞர், சென்னையில் மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும் மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார், இது தொடர்பாக முக ஸ்டாலின் தனது வலைதளத்தில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, இக்கொடுஞ்செய்தியில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார், மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் கூறியுள்ளார், மேலும் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு நேரம் காலம் பாராமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது இப்பணியின் போது அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்..!!

Read Previous

மகிழ்ச்சி : 8 இடங்களில் மகளிர்க்கு பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் அமைக்கிறது சென்னை மாநகராட்சி..!!

Read Next

அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அன்புமணி வலியுறுத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular