
- இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.அந்த வகையில் சென்னையில் தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோந்த வேலை வழங்குவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.
அதன்படி, இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். இம்முகாமில் ஏராளமான தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.