சென்னையில் இருந்து 120 கி.மீ. தொலைவில் மிக்ஜாம்..!!

சென்னையில் இருந்து 120 கி.மீ. தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது மிக்ஜாம் புயல். ஆந்திராவின் நெல்லூரில் இருந்து 80 கி.மீ. தென் கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து புயல் விலகிச் செல்வதால் நள்ளிரவுக்கு பின் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள அரசு எடுத்துவரும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read Previous

பொங்கல் பண்டிகை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000..!!

Read Next

அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular