சென்னையில் தொடரும் நாய்க்கடி சம்பவம்..!! நாயைப் பிடித்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள்..!!

சென்னையில் தொடந்து நாய் கடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வளர்ப்பு நாயின் உரிமையாளர்களை கைது செய்தது காவல்துறையினர். பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பூனை, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி இடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சென்னை மதுரவாயில் பகுதியை சார்ந்தவர் ரமேஷ் குமார். அவரை பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்து உள்ளது. அவருக்கு காலில் இரண்டு தையல்கள் போடப்பட்டு உள்ள நிலையில் நாயின் உரிமையாளர்களின் மீது பாதிக்கப்பட்டவர் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நாய் பிடிக்கும் வாகனத்தில் வந்து அந்த நாயினை பிடித்து சென்று உள்ளனர்.

Read Previous

GOOD NEWS | TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு – 118 காலிப்பணியிடங்கள்..!!

Read Next

பயங்கர விபத்து..!! ஆம்னி பேருந்து லாரி மீது மோதியதில் 4 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular