
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. மாலையில் சாரல் மழை பெய்த நிலையில், இரவு 7 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், அமைந்தகரை, எழும்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மணலி, புழல், பூவிருந்தவல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.