சென்னையில் பிராய்லர் கோழி விலை கிடுகிடுவென உயர்வு..!! சோகத்தில் அசைவ பிரியர்கள்.!!

கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் இரண்டு வாரங்கள் வரை தமிழக மட்டுமல்லாது இந்திய முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்தது, இதனால் இறைச்சி கோழிகள் மற்றும் முட்டை உற்பத்தி கடுமையாய் பாதிக்கப்பட்டது.

உலக அளவில் முட்டை மற்றும் இறைச்சி கோழிகளை ஏற்றுமதி செய்து வரும் நாமக்கல்லில் வெப்பம் கொளுத்தி எடுத்த காரணத்தால் உற்பத்தி குறைந்தது முட்டை மற்றும் கறிக்கோழி விலை என்பது கிடுகிடுவென உயர்ந்தது. அந்த வகையில் கடந்த வாரம் வரை ரூ.240 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோழி இறைச்சி விலையானது தற்பொழுது சென்னையில் கிடுகிடுவென உயர்ந்து கிலோவுக்கு ரூ.320 முதல் ரூ.380 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த தகவல் சென்னையில் உள்ள அசைவ பிரியர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது, மேலும் கறிக்கோழி விலை உயர்வு காரணத்தால் உணவகத்தில் கோழி இறைச்சி சார்ந்த உணவு விலைகளை உயர்த்தலாம் அல்லது அளவை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

வைகை ஆற்றில் மூழ்கி சோகம்..!! 10 வயது சிறுவன் பலி.!!

Read Next

“சிறுமி ஒருவருக்கு ரூ.30 ஆயிரம்” – மகளின் தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்..!! சென்னையில் பகீர்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular