சென்னையில் பெருஞ்சோகம் திருமணமான ஒரே நாளில் உயிரிழந்த மணமகன்..!! பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சோகங்கள்..!!

சென்னையை சார்ந்த ஐடி ஊழியர் திருமணமான முதல் நாளே வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மணப்பெண் அதிர்ச்சி கொள்ளாகி உள்ளார்.

சென்னையில் உள்ள பெரவள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் லோகேஷ் (வயது 40). இவர் ஐடி ஊழியராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் திருச்சி சார்ந்த ராஜலட்சுமி( வயது 36) என்பவரை கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தை தொடர்ந்து மணமகன் வீட்டில் தம்பதிகள் பேசிக் கொண்டிருந்தனர்.

அச்சமயம் திடீரென லோகேஷின் வாய் மற்றும் மூக்கிலிருந்து நுரை தள்ளியது, இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், உடனடியாக மணமகன் லோகேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர் .அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லோகேஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் புதுமணப்பெண் மிகுந்த அதிர்ச்சி உள்ளாகியுள்ளார்.

ராஜலட்சுமி முன்னாள் கணவர் கொரோனாவால் உயிரிழந்துவிட சில ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது துணையை தேர்வு செய்த நிலையில் அவரும் தற்போது உயிரிழந்திருப்பது அந்த பெண்ணுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை கொண்டு வருகின்றனர்.

Read Previous

இளம் பெண்ணுடன் லாட்ஜில் இருந்த வாலிபர் திடீர் தற்கொலை..!! நடந்தது என்ன..?

Read Next

தர்மபுரியில் சோகம்..!! பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மகன் கண் முன்னே துள்ளத் துடிக்க உயிரிழந்த தந்தை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular