சென்னையில் பேரதிர்ச்சி.!! திருநங்கை காதலனின் ரகசியம் அறிந்து காதலை கைவிட்ட இளம்பெண்..!! பிறந்தநாள் பரிசு தருவதாக தீர்த்துக்கட்டிய பயங்கரம்..!!

மதுரையை பூர்வீகமாக  கொண்ட இளம் பெண் நந்தினி (வயது 28), சென்னையில் செயல்பட்டு வருகின்ற ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். வெற்றி என்பவரை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

வெற்றி திருநங்கை என கூறப்படும் நிலையில் உண்மையை அறிந்த நந்தினி காதலை முறித்துக் கொண்டுள்ளா.ர் தற்போது வேறு ஒருவருடன் காதல் வயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று நந்தினியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த சமயம் முன்னாள் காதலன் வெற்றி நந்தினியை கோவில் உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உள்ளார்.அவரும் நம்பி சென்றார்.

இதனிடையே இரவில் தனது காதலியை கேளம்பாக்கம் பகுதிக்கு அழைத்து சென்ற வெற்றி இன்ப அதிர்ச்சி தருவதாக நந்தினியின் கை, கால்களை சங்கிலியால் கட்டி உடல் பாகங்களை துண்டு துண்டாக அறுத்து கொலை செய்தார், பின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து அங்கிருந்து தப்பி சென்றார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், நந்தினியின் முன்னாள் காதலன் வெற்றி தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read Previous

சளி, இருமல், காய்ச்சல் தொல்லையில் இருந்து நீங்க துளசி சாதம்; செய்வது எப்படி?

Read Next

சமூகநீதியின் நாயகன் ஈ.வே இராமசாமி என்ற பெரியார் நினைவு தினம் இன்று.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular