சென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் : மேயர் பிரியா தகவல்..!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்..

மேலும் கடந்த மலையின் போது 24 மணி நேரத்துக்கு மேலாக தண்ணீர் தேங்கின்ற இடங்களில் கண்டறியப்பட்டு அப்பகுதிக்கு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று நவம்பர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார், அப்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் சென்னையில் வரும் 14 15 தேதிகளுக்கு பிறகு கனமழை இருக்கும் என வானிலை மையம் கூறி இருக்கிறது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் துணை முதல்வரும் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அமைச்சர்களும் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அந்த பகுதியில் எல்லாம் அவர்களும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர், இதனலையில் கடந்த மாதம் பெய்த மழையின் போது சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டுள்ளது 24 மணி நேரத்துக்கும் மேலாக எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது அப்பகுதியில் வரக்கூடிய நாட்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மோட்டார் தேவையான பகுதிகள் தேங்கி நிற்கும் தண்ணீரை குழாய் மூலம் மழை நீர் வடிகாலுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் தெற்கு வங்க கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது இதனால் மழைநீர் தேங்காாமல் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று மேயர் பிரியா கூறியுள்ளார்..!!

Read Previous

அடுத்த நிதியாண்டில் சென்னைக்கு ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணியை தொடங்க திட்டம் : ஐசிஎஃப் அதிகாரிகள் தகவல்..!!

Read Next

ஒன்பது ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular