சென்னையில் முதன்முதலாக அறிமுகமாகவும் பிங்க் ஆட்டோ, பெண் ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சம் மானியம்..!! தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 200 பெண்களை தேர்வு செய்து ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கி பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்த உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் மாலை நேர நிகழ்வு தொடங்கியது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் நலன் துறை ஆகிய துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு துணை அமைச்சர் முத்துசாமி ,கீதாஜீவன் ஆகியோர் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அறிவிப்புகளை  அந்த துறையின் அமைச்சரான கீதா ஜீவன் வெளியிட்டு வருகிறார். அதில் அவர் கூறி இருப்பது “சென்னையில் 200 பெண்கள் தேர்வு செய்து ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கி பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 200 பெண்களுக்கு சுய தொழில் செய்ய ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திருவள்ளூர், திருப்பூர், தூத்துக்குடி ,கோவை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு கோடியில் மகளிர் விடுதி சீரமைக்கப்பட உள்ளது.

மேலும் ஒரு கோடி ரூபாயில் அரசு சேவை இல்லங்கள், 27 குழந்தை காப்பகம்., மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி ஆகியவற்றை தமிழக அரசு அளிக்க உள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2. 73 லட்சம் மாணவிகளுக்கு மாதம்  ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. 2023ல் தமிழ்நாட்டில் 1995 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது”, என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

11ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..!! எப்போது தெரியுமா..?

Read Next

விழுப்புரத்தில் கள்ளச்சாராய விற்பனை..!! சென்னையில் அனுமதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular