சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை..!! விமான சேவைகள் பாதிப்பு..!!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று (செப்டம்பர் 25) இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. அதாவது கோயம்பேடு, கே.கே.நகர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், மயிலாப்பூர், வடபழனி, அண்ணா நகர், தியாகராய நகர், திருவெற்றியூர், எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, மணலி, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால், பெங்களூரு, மும்பை, விஜயவாடா, புவனேஸ்வர், கோழிக்கோடு, திருச்சியில் இருந்து சென்னை வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானத்தில் வட்டமடித்தபடி இருந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர் . நீண்ட நேர தாமதத்திற்கு பின் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

Read Previous

இந்த பொருட்களை எல்லாம் மறந்து கூட யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்க கூடாதாம்..!! ஏன் தெரியுமா..??

Read Next

வீட்டு வரி ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?.. இதோ உங்களுக்காக..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular