
தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று 12.11.2024 அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது, என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப அறிவித்துள்ளார்..
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது, முன்னதாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் அறிவிக்க பட்டிருந்த நிலையில் மழையின் தீவிரம் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார், இதனிடையே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் பள்ளி கல்லூரி இன்று நவம்பர் 12 வழக்கம் போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, அதேசமயம் இம்மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது, இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையையொட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இதன் தாக்கத்தால் தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது என்று சென்னை வானிலை மையம் தலைமை அதிகாரி அறிவித்துள்ளது..!!