
சென்னையில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த அத்தையை மருமகனும், அவரும் நண்பரும் சேர்ந்து கொடூரமாய் கொலை செய்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியினையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியை சார்ந்தவர் அன்பு (வயது 60) இவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 55) இந்த தம்பதியினருக்கு மரியம் லாசர் என்ற மகன் உள்ளார். அன்பு இருப்பு கம்பெனி ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணிக்கு மகன் லாசர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாய் வேளாங்கண்ணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் உதவியுடன் காவல் துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வேளாங்கண்ணி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதனை தொடர்ந்து மேலும் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வேளாண் கன்னியின் தம்பி மகன் அகஸ்டின் அருள் தனது நண்பர்களுடன் இவர் வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு அகஸ்டின் அருளை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்தி விசாரணையில் அகஸ்டின் அருளும் அவரது நண்பன் இருவரும் சேர்ந்து வேளாங்கண்ணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். மற்றும் அவரது நண்பன் சாலமன் இருவரும் அத்தை வேளாங்கண்ணி வீட்டிற்கு சென்றபோது தனிமையில் இருந்து அவரை பார்த்துள்ளது தப்பான நோக்கத்துடன் அத்தையின் தோள்பட்டியில் கை வைத்துள்ளான் அகஸ்டின் அருன் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வேளாங்கண்ணி அகஸ்டின் அருளை திட்டியதோடு அவரது பெற்றோரிடம் கூற போவதாய் தெரிவித்தார் .
இந்தனால் ஆத்திரமாடைந்த அகஸ்டின் வேளாங்கண்ணி தலையை பிடித்து தரையில் கொடூரமாய் தாக்கியதோடு அருகே இருந்த ஸ்கூரு டிரைவர் எடுத்து அவரது கழுத்தில் குத்தி கொடூரமாய் படுகொலை செய்துள்ளார் .மேலும் இதனை காவல்துறையினால ஒப்புக்கொண்டு வாக்குமூலமாக அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அகஸ்டின் அருள் (வயது 21 )மற்றும் நண்பன் சாலமன் (வயது 25) இருவரையும் கைது செய்தனர்.