
சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சார்ந்த பழ வியாபாரி ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து தனது தங்கை நாகவல்லி மற்றும் கள்ளக்காதலன் சக்திவேல் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் காவல் துறையினர் குற்றவாளிகள் ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முறையற்ற வாழ்க்கையில் இருந்த ராஜேஸ்வரி கள்ளக்காதல் பழக்கத்தில் ஈடுபட்ட தங்கையை கண்டித்ததால் கொலை நடந்தது என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக குற்றவாளிகள் சைதாப்பேட்டை ஜெகதீசன், மீஞ்சூர் சூர்யா, திண்டிவனம் சக்திவேல், சென்னை ஜாக்சன், ராஜேஸ்வரியின் தங்கை நாகவல்லி ஆகியோர் கொலைக்கு முன்பு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூரில் ஓட்டுனர் செல்வம் என்பவர் அந்த வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடித்து விட்டு பின் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொலை வழக்கில் தொடர்புடைய கும்பல் விசாரணைக்காக வானூர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.