
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று காலை 11:10 மணிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அவர் கோயம்பேட்டில் பேருந்து நிலையத்தில் உள்ள நிலையத்தில் நடைபாதை ஒன்றில் சரியாக 11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.
தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்து நடப்பாதையில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த நடைபாதையில் உள்ள பயணிகள் அவர்களது பைகள் பேருந்துகள் மற்றும் அங்குள்ள கடைகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாய் சோதனை செய்துள்ளனர்.
சோதனையில் நடைபாதை 1-ல் எந்த ஒரு வெடிகுண்டும் இல்லாததால் நடைபாதை இரண்டில் சோதனையை தொடர்ந்து நடத்தி உள்ளன. இந்த சம்பவத்தால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.