சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் – அலைமோதும் கூட்டம்..!!

தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தமிழக அரசின் சிறப்பு பேருந்து, ரயில்களில் புறப்பட்டு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்ப இன்று முதல் 15ஆந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று மாலை முதலே மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதற்கான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சிவகங்கை, கோவை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read Previous

உயர்நீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் மாற்றம்..!!

Read Next

இன்றைய ராசிபலன் 14-11-2023..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular