இந்தியாவில் ஆண்மை குறைபாடு அதிகரித்துள்ளதாக சென்னை தனியார் மருத்துவமனையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு தகவல் வெளிவந்துள்ளது..
சென்னை சென்ட் தனியார் மருத்துவமனையில் ஆண்மை குறைபாடு பற்றிய ஆய்வை மேற்கொண்ட போது அந்த ஆய்வில் கிடைத்த தகவலை வெளியிட்டுள்ளது, இதில் பங்கேற்ற 13 ஆயிரத்து 820 இளைஞர்களுக்கு விந்தணு சோதனை நடத்தப்பட்டது அதில் பலருக்கு ஆண்மை குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது, இளைஞர்களில் ஐந்தில் ஒருவருக்கு இயற்கையாகவே பாலியல் பிரச்சனை இருப்பதாக தெரியவந்துள்ளது, ஒருவர் தலை முடிக்கு பயன்படுத்தும் சேம்பில் தொடங்கி 3000 வகையான ரசாயனங்களை உட்கொள்வதனாலும் குழந்தை இன்மை பிரச்சனையை உடலில் உண்டு பண்ணுகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது, மாறிவிட்ட வாழ்க்கை முறை துரித உணவு மன உளைச்சல் மற்றும் நடைபயிற்சி ஆகியவற்றை காரணமாகவும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதாக அந்த தகவல் தெரிய வந்துள்ளது, ஆண்மை பிரச்சனையிலிருந்து தீர்வு காண்பதற்கு இயற்கை உணவு முறை நடை பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்வு மன நிம்மதி இவற்றை கொண்ட சூழ்நிலைகளை கையாளும் பொழுது ஒருவருக்கு இயற்கையான முறையில் ஆண்மை தன்மை அதிகரிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர…!!




