
சென்னை மாநகராட்சியின் இந்த நிதியாண்டுக்கான (2023-24) பட்ஜெட்டை மேயர் பிரியா பிப்ரவரி மாதம் தாக்கல் செய்கிறார். இதற்காக அவரது தலைமையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்களிடம் பட்ஜெட் தயாரிப்பு குறித்து தனித்தனி குழுக்களாக ஆலோசித்துள்ளார். 25ஆம் தேதி அனைத்து குழுக்களுடனான ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் கீழ் பட்ஜெட் தயாரிக்கப்படுவதால், இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை, மழைநீர் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.