சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த இவர், சென்னை பெருநகர காவல் துறையின் 110 வது கமிஷனராக உள்ளார்..
தமிழ்நாட்டில் அதிமுக திமுக என்று எந்த கட்சி வந்தாலும் ஐபிஎஸ் அருணுக்கு பவர்ஃபுல் போஸ்டிங் கிடைக்கும், காவல்துறையில் சட்டம் ஒழுங்காக இருந்தாலும் சரி, குற்ற புலனாய்வாக இருந்தாலும் சரி போக்குவரத்து துறையாக இருந்தாலும் சரி அதிரடிக்கு பெயர் போன ஐபிஎஸ் அதிகாரி அருண், அருண் 1998 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி, சென்னை பல்கலைக்கழகத்தில் பிஇ மெக்கானிக்கல் படித்த பிறகு தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ போலீஸ் படித்துள்ளார், ஐபிஎஸ் பயிற்சி முடிந்து நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏஎஸ்பி யாகவும் பணிபுரிந்து பிறகு கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் எஸ்பி ஆகவும் பணியாற்றியுள்ளார், பிறகு சென்னை வந்து சென்னை அண்ணாநகர் பரங்கிமலையில் துணை ஆணையராக பணியாற்றியுள்ளார், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளரும் பணியாற்றியுள்ளார், 2012ல் டிஜிபியாக திருச்சியில் சாரக போலீஸ் துணை கமிஷனர் ஆக பணியாற்றியுள்ளார், சென்னை பெருநகர காவல் துறையில் டிஜிபி ஆக பதிவி உயர்வு பெற்றுள்ளார்..!!