ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் உலகமெங்கும் கொலை கொள்ளை இவற்றைத் தாண்டி தற்கொலைகள் அதிகரித்து வருகிற நிலையில் தற்கொலைகளை தடுப்பு தினமாக அறிவித்துள்ளது..
மனிதர்களுக்கிடையே எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு ஒரே தீர்வு தற்கொலை தான் என்று பலரும் முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொள்வதிலேயே தீர்வு காண்கின்றனர், ஆனால் தற்கொலை என்பது நிரந்தர தீர்வு அல்ல தற்காலிக தீர்வு மட்டுமே அதேபோல் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை, காதல் தோல்வியோ குடும்ப தகராறு அல்லது பெரியவர் திட்டினாலும் கடன் பிரச்சனையோ அல்லது ஆசிரியர் அடித்தாலும் இவற்றையெல்லாம் காரணம் கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள தற்கொலை செய்து கொள்கின்றனர் பலரும், இது போன்ற தற்கொலைகளை தடுப்பதற்கும் தற்கொலைகள் நடக்காமல் இருப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது..!!