உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும். மேலும், உடல் எப்போதும் சோம்பேறியாகவும் மந்தமாகவும் இருக்கும். எனவே, அடிக்கடி காய்ச்சல் வரும் நபர்களுக்கு செம்பு பாத்திர தண்ணீர் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதனை தினமும் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ரோக்கியமாக இருக்கும். செம்பானது, உடலின் அமிலத்தன்மை, இதய எரிச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றை குறைக்கிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.
* கீல்வாதம் மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை குடிப்பதால் நிவாரணம் பெறலாம்.
* உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவது பலன் தரும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.
* செரிமான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் மேம்படும். தோல் சுருக்கங்கள் நீங்கி சரும ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
பின்குறிப்பு: தினமும் பாத்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும்.