செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

‘’பென்சில் போல் வாழ்ந்தால்..’’

 

❤️ஒருவனுடைய உழைப்பு என்றுமே வீணாவதில்லை. அவன் எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் இருக்கலாம்.

 

❤️பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டு விடக்கூடாது.

 

❤️பல மாதங்கள் தொடர்ந்து உழைத்து வந்தால் பெரிய பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும்.

 

❤️ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்..

 

❤️வெற்றிக்கு யார் உங்களுக்கு வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள்.

 

❤️”இவர் தான்” என்று சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க பிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்!

 

❤️நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், இந்தப் பென்சில் எனக்கு ஐந்து செய்திகளைக் கற்றுத் தந்தது.

 

❤️பல கருத்துக்களையும், சிந்தனைகளையும் எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.

 

❤️அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போது எல்லாம் கூர்மையடைகிறது.

 

❤️தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.

 

❤️வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.

 

❤️சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டு இருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது.

 

❤️இதைப் பார்த்துத் தான் என் வாழ்க்கையை நான் சீர் செய்து கொண்டேன்.

 

❤️பல அரிய செயல்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு இருக்கிறேன்..

 

❤️சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.

 

❤️தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.

 

❤️வெளிச்சூழலில் புகழ் வந்தாலும், பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.

 

கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 

❤️காலத்தில் நம் சுவட்டைப் பதித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்..

 

ஆம்.,

 

🌹அடக்கம் தான் வாழ்வின் மிகப்பெரிய செல்வம்…

அடக்கம் நம்மை உயர்ந்த இடத்தில் வைக்கும்.

 

செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள்.

 

கடின உழைப்பு ஒன்று தான் ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும்.

🌹🌹🌹🌹🌹🌹

Read Previous

அவளுக்காக எழுதிய கவிதை..!! அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மத்திய அரசில் 7267 வேலை வாய்ப்பு..!! நாளை கடைசி நாள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular