இன்றைய காலகட்டத்தில் பலரும் செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் அவற்றிற்கு வயது என்பது கணக்கில்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை செரிமான பிரச்சினையால் அவதிப்பட்டு செரிமானத்திற்கு மருத்துவரை நோக்கி ஓடுவது வழக்கம், சில நேரத்தில் நெஞ்சு எரிவது போல் உணர்வு மற்றும் ஏப்பம் இடுவதற்கு சிரமம் இதையெல்லாம் செரிமான பிரச்சனைகளின் அறிகுறியே..
செரிமான பிரச்சனையா? அப்ப கண்டிப்பா இந்த ஐந்து பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் அவற்றைப் பற்றி காண்போம் ஆப்பிளில் நார்சத்து நிறைந்துள்ளது இது உங்கள் செரிமான அமைப்பை சரியாக செயல்பட வைக்க உதவுகிறது நார்ச்சத்திற்கான மற்றொரு சிறந்த ஆதாரம் வாழைப்பழம் ஆகும் சரியான செரிமானத்திற்கு முக்கியமான பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகவும் இருக்கும், மேலும் அன்னாசி பழத்தில் பபுரோமிலைன் என்ற நொதி உள்ளது இது புரதங்களை உடைத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை வேலையாக வைத்திருக்கிறது, மேலும் இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் பட்டர் ப்ரூட்டீல் உள்ளது ஆரஞ்சு எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிஸ்டர் பலன்களை வைட்டமின் சி மற்றும் உணவு நார்ச்சத்துக்களை கொண்ட சிறந்த ஆதாரங்கள் ஆகும்..!!




