
பொதுவாகவே குளிர்காலங்களில் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே கிடைக்கும். அப்படி இருக்கும் போது நம் உடலுக்கு வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் சிறந்தது.
முதலாவதாக சாப்பிட வேண்டியது அண்ணாச்சி பழம். இதில் பொட்டாசியம் தாமிரம் இரும்பு சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனை இருந்து தீர்வு கிடைக்கும்.
இரண்டாவதாக சாப்பிட வேண்டியது திராட்சை. இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால் இது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
மூன்றாவதாக சாப்பிட வேண்டியது பேரிக்காய். இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த ஓட்டத்தை சாதாரணமாக்க உதவுகிறது. மேலும் இது புற்று நோயை எதிர்த்து போராடுகிறது.
நான்காவதாக சாப்பிட வேண்டியது ஆரஞ்சு. இந்தப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் காயங்கள் ஆறுவதற்கு உதவுகிறது. மேலும் ரத்த சோகை அபாயத்தை குறைத்து செல்களை வலுப்படுத்துகிறது..