செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்..!!
உடலிலேயே செரிமான மண்டலம் மிகவும் முக்கியமான உறுப்பு. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக இயங்கும்.
அதிலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கேரட்
கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 2 கேரட்டை உட்கொண்டு வந்தால், அவை வாழ்நாளில் 10 வருடத்தை அதிகரிக்கும்.எனவே இதனை உட்கொண்டு வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
தயிர்
தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருப்பதால், அதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து, செரிமானம் சீராக நடைபெறும்.
இளநீர்
தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பமானது தணியும். மேலும் இவை குடல் மற்றும் வயிற்றை திறம்பட செயல்படத் தூண்டும்.
நட்ஸ்
தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலமானது சீராக செயல்படும்.
இஞ்சி
இஞ்சியின் அற்புதத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எனவே முடிந்த அளவில் தினமும் உணவில் இஞ்சியை தவறாமல் சேர்த்து வாருங்கள். உங்கள் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.