செருப்பு போடுவதையே தவிர்த்த ”விஜய் ஆண்டனி” ஏன் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் விஜய் ஆண்டனி. இவர் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியும் இசையமைத்தும் பிரபல இசையமைப்பாளராக தமிழ் திரைப்படத்தின் மூலமாக இவரது கேரியர் கடந்து 2005 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.

பல்வேறு படங்களுக்கு இவரை இசை அமைத்திருக்கிறார். ஹீரோ என எடுத்துக்கொண்டால் இவர் முதன் முதலில் நான் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு சலீம், பிச்சைக்காரன், சைத்தான் எமன், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன்,பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு ஷாக்கிங் விஷயத்தை கூறியுள்ளார். அதாவது, நான் செருப்பு போடுவதே தவிர்த்து விட்டேன். செருப்பு இல்லாமல் நீங்களும் நடந்து பாருங்க அதோட அருமை நிச்சயமாக உங்களுக்கு புரியும். சீரியஸா சொல்றேன். கிட்டத்தட்ட ஒரு மாசம் செருப்பு இல்லாமல் நீங்கள் நடந்து பாருங்களேன் அதோட பயன் உங்களுக்கு நிச்சயமா தெரியவரும்.

அதோட ரிசல்ட் வேற மாதிரி இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். ஒரு பிரபலமான நடிகர் செருப்பு போடாமல் இருக்கிறாரா என்பதை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள். விஜய் ஆண்டனியின் இந்த எளிமையான குணம் தான் எல்லோருக்கும் பிடித்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Read Previous

கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்..!!

Read Next

கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து..!! பலத்த காயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular