
உலகம் எங்கும் செல்ஃபிமயமாகவே இருக்கிறது, தங்களை அழகுப்படுத்திக் கொள்வதிலும் தங்களை அழகு படுத்திக் கொண்டதை செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதும் இன்றைய தலைமுறையினர் செய்து வருகின்றனர்..
அப்படி இருக்கும் பட்சத்தில் செல்ஃபி எடுப்பதனால் காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்கள், இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை செல்ஃபி எடுப்பதில் மோகமும் பித்துநிலையும் கொண்டிருக்கின்றனர், அடிக்கடி செல்ஃபி எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு செல்ஃபிடிஷ் என்ற நோய் தொற்று ஏற்படுவதாகவும் மருத்துவர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர், ஆரம்ப நிலை, கடுமையான நிலை, மோசமான நிலை என்று மூன்று விதமாக செல்ஃபி டிஷ் சிண்டரோம்களை மூன்று வகைகளாக பிரித்துள்ளனர், செல்ஃபி எடுப்பது அதனை சமூக அறிவியல் பதிவிட்டு லைக்குகள் மற்றும் கமாண்டிற்காக காத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளாகுவது இதன் அறிகுறியாக கூறுகின்றனர், இந்த அறிகுறிகளைக் கொண்டு பாதித்தவர்களுக்கு சிகிச்சை முறை கிடையாது ஆனால் உளவியல் நிபுணர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று தங்களை செல்ஃபி எடுப்பதில் இருந்து மாற்றுவதன் மூலம் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று கூறுகின்றனர்..!!