
அமேசான், பிளிப்கார்ட், மீசோ உட்பட பல்வேறு ஆப்- களில் பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர் மக்கள். மேலும் இதில் ஆர்டர் செய்தால் பொருட்கள் சரியாக வரவில்லை என்ற வதந்தியும் பரவிவருகிறது. மேலும் இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, பெக்கோரையை சேர்ந்த மோதிலால் சமீபத்தில் ஆன்லைனில் செல்ஃபோன் ஆர்டர் செய்திருந்தார், அவருக்கு பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பார்சலை திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சியாக, செல்போனுக்கு பதில் வெள்ளை நிற கல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியான மோதிலால், அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்..