செல்லமாக வளர்த்த பூனையே எமனாக மாறியது..!! பொள்ளாச்சியில் நடந்த சோக சம்பவம்..!!

செல்லப்பிராணிகள் வளர்ப்பது பலருக்கு பிடித்தமான ஒரு செயல்தான். நாய், பூனை, ஆடு, கோழி, கிளி, ஏன் எலி வரை செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு சில நேரத்தில் நாய் போன்ற செல்லப்பிராணிகள் கடித்து விடுவது உண்டு. ஆனால் செல்லமாக வளர்த்த ஒரு செல்ல பிரியாணியால் அந்த உரிமையாளரின் உயிரே போய்விட்டது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் பொள்ளாச்சியில் நடந்திருக்கிறது.

கோயம்புத்தூருக்கு அருகில் பொள்ளாச்சியில் 58 வயதான சாந்தி என்ற பெண்மணி கணவர் ரவி மற்றும் மகன் சந்தோஷுடன் வசித்து வந்திருக்கிறார். இவர்கள் செல்லமாக ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டில் சாந்தி அவரது கணவர் ரவி மகன் சந்தோஷ் மூன்று பேரும் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அந்த நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் பூனை ஒன்று கட்டுவிரியன் என்ற விஷப்பாம்பை கண்டு அதனிடம் சண்டையிட்டு வாயில் கடித்து எடுத்துட்டு வந்து நேராக இவர்கள் தூங்கிக் கொண்டிருந்த ரூமில் போட்டு விட்டு சென்றிருக்கிறது.

பூனையிடம் கடிபட்டதால் ஆக்ரோஷமான விஷத்தன்மை வாய்ந்த கட்டுவிரியன் பாம்பு ரூமினுள் அங்கும் இங்கும் ஓடி கடைசியில் சாந்தியையும் கடித்திருக்கிறது. தூக்கத்திலிருந்து விழித்த சாந்தி, பாம்பையும் தன்னை கடித்ததையும் பார்த்து அலறி இருக்கிறார். உடனே அவரது கணவர் ரவி மற்றும் சந்தோஷ் சாந்தியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு காரில் விரைந்து அழைத்து சென்று இருக்கின்றனர்.

ஆனால் கட்டுவிரியன் அதிக விஷத்தன்மை கொண்டது கொண்ட பாம்பு என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக சாந்தி உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒரு செல்லப்பிராணியால் வீட்டில் உரிமையாளர் இறந்துவிட்ட சோக சம்பவம் நடந்திருக்கிறது.

Read Previous

கத்தரிக்காயின் மகத்துவம் காலம் முழுவதும் பேசும்..!!

Read Next

ரயில்வேயில் பணிபுரிய விருப்பமா?.. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular