செல்வ செழிப்பை அதிகரிக்க வேண்டும் என்றால் அரிசி தானம் செய்யுங்கள் இதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் செழிப்பு மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சி நிலவும் என்று ஜோதிடம் கூறுகிறது..
எந்த ஒரு தானம் செய்தாலும் அதில் நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, மேலும் அரிசிதானம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம் அரிசி தானம் கொடுப்பது என்பது நமது முன்னோர் காலத்தில் இருந்த ஒரு பழக்கமாகும் கோவிலுக்கு பொங்கல் விடுவதாகவும் அரிசி தானம் கேட்டு வருபவர்கள் அதிகம் அதே போல் வீடு வீடாகச் சென்று குறி சொல்லி அரிசி தானம் பெறும் நபர்களும் உண்டு, இதன் மூலம் அரிசி தானம் செய்வதனால் வீட்டில் உள்ள கடன் மற்றும் பிரச்சனை தட்டுப்பாடுகள் விலகி மகிழ்ச்சி சந்தோஷம் அந்த வீட்டில் நிலவி செல்வ செழிப்பாக வீட்டில் முன்னேற்றமா காண முடியும் என்றும் இதன் மூலம் தலைமுறை தலைமுறை செழிப்பாக வாழ்வார்கள் என்றும் கூறுகிறது..!!