நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சில நாட்களில் இதையெல்லாம் வாங்கக்கூடாது இதையெல்லாம் கொடுக்கக் கூடாது என்று வழக்கமாக ஒரு சில வீடுகளில் இருக்கும். குறிப்பாக ஒரு சிலர் எந்த நாட்களாக இருந்தாலும் சரி ஆறு மணிக்கு மேல் பணம் தர மாட்டார்கள். வாங்கவும் மாட்டார்கள். ஒரு சிலர் மாலை ஆறு மணிக்கு மேல் உரை ஊற்றுவதற்கான தயிரை கூட தர மாட்டார்கள். மேலும், வெள்ளி மற்றும் செவ்வாய் நாட்களில் எதையும் கடனாக கொடுக்க மாட்டார்கள். இந்த நவீன காலகட்டத்தில் இந்த பழக்கம் எல்லாம் மாறிவிட்டது என்று சொன்னாலும், ஒரு சில வீடுகளிலும், ஒரு சில கிராமப்புறங்களிலும் இவற்றையெல்லாம் இன்னும் கடைப்பிடித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையன்று ஒரு சிலவற்றையெல்லாம் ஒரு பொழுதும் வாங்க கூடாது. அது என்னன்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமையன்று ஒரு பொழுதும் ஆண்கள் மது அருந்தக்கூடாது, மற்றும் ஆண்கள் பெண்கள் இருவருமே இறைச்சி சமைக்கவும் கூடாது குறிப்பாக வீட்டிற்கு வாங்கி வரக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் மிகவும் என்று கூறப்படுகிறது. மேலும், கண்ணாடி பொருட்களை வாங்கினால் பண இழப்பும் குடும்பத்தில் மன நிம்மதி கெடும் வகையில் பல பிரச்சினைகள் ஏற்படுமாம். இரும்பு பொருட்களை வாங்கினால் அந்த வீட்டில் ஏதோ ஒரு தீய காரியம் நிகழும் என்றும் பண நெருக்கடி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று அழகு சாதன பொருட்களை பெண்கள் வாங்கினால் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. கருப்பு நிறத்தில் ஆடைகளை வாங்கவே கூடாது இது மாங்கல்ய தோஷம் வினைகளை ஏற்படுத்துமாம். எனவே செவ்வாய்க்கிழமை அன்று இதையெல்லாம் வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.




