நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஸ்ரீ பெரிய பெரிய மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சாதிகளுக்கு இடையே சண்டை வந்து அது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது அதனைத் தொடர்ந்து இந்த சேந்தமங்கலம் பெரிய தேர்நிலையும் அருகில் காலை 10 மணி க்கு ஆர்ப்பாட்டம் நடந்தது..
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் ஆவணி மாத ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு ஏழு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது அந்த திருவிழாவில் இரண்டு பிரிவினருக்கு இடையே வாய் வார்த்தை கருத்து முதல் ஏற்பட்டு அது கைச்சண்டையாக மாறியது மேலும் அதில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அதை தொடர்ந்து சேந்தமங்கலம் பெரிய தேர் நிலையம் அருகில் இன்று காலை 10:00 மணிக்கு தமிழர் தேசம் கட்சியின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது, மேலும் கால்பந்தாட்ட வீரரை சாதிப் பெயர் சொல்லி களங்கப்படுத்தியதை கண்டித்தும் ஆபாச வார்த்தைகள் திட்டி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் இப்ப போராட்டம் நடைபெற்றது என்று ஒரு பிரிவினர் கூறியுள்ளனர், மேலும் சேந்தமங்கலம் காவல்துறையினர் அந்தப் போராட்டத்தில் தலைமை காத்து சுமூகமான முறையில் போராட்டத்தை கலைத்து அனுப்பி உள்ளனர்..!!




