நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு பக்தர்கள் அழகு குத்தி பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்..
சேந்தமங்கலம் ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகை, திங்கள்கிழமை ஆகஸ்ட் 26 தொடங்கிய அன்று பூ குழியும் ஆகஸ்ட் 27 நேற்று அழகு குத்தும் நிகழ்வு நடந்தது இதில் பக்தர்கள் பலரும் தங்களின் வேண்டுதல்களை சிறப்பிக்கும் வகையில் முதுகில் அழகு குத்தியும் கடவாயில் அழகு பத்தியும் கிரேன் மூலம் வலம் வந்தனர், இந்த நிகழ்வு மதியம் 2 மணி அளவில் தொடங்கி இரவு 10 மணி அளவில் நிறைவடைந்தது, மேலும் ஆண்டுதோறும் கிரேன் மூலம் அளவு குத்தி வந்து மாரியம்மன் பண்டிகை சிறப்பிக்கும் வகையிலும் பக்தர் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையிலும் செய்து வருகின்றன இந்த அழகு குத்து நிகழ்வை காண்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் பலரும் வந்து கலந்து கொண்டு ஸ்ரீ மாரியம்மன் தரிசனம் பெற்று சென்றனர், மேலும் சுற்றுவட்டார மக்கள் எல்லாம் இந்த திருவிழாவை சிறப்பித்துக் கொண்டாடி வருகின்றனர்..!!