
- அமெரிக்க அரசியல் பிரதிநிதி சுட்டுக்கொலை. நியூ ஜெர்ஸியில் பரபரப்பு.!
சேயர்வில் நகரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் கவுன்சிலர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் சேயர்வில் நகரின் குடியுரிமை கட்சியின் கவுன்சிலர் யூனிஸ் டுவம்ஃபோர் கடந்த புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்மநபர்களால் பலமுறை சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சுடப்பட்ட போது அவர் வீட்டிற்கு அருகில் உள்ள தனது காரில் இருந்ததாக தகவல்கள் உள்ளன.இதுகுறித்து அவரின் பிரச்சார மேலாளரும் சேயர்வில் நகரின் குடியுரிமை கட்சியின் தலைவருமான கரேன் பெய்லி பெபர்ட் கூறுகையில் இது மிகவும் மோசமான நிகழ்வு எங்கள் இதயங்கள் நொறுங்கி விட்டன இந்த சம்பவத்தை செய்தவர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலை அனைவரும் விரும்புகிறார்கள் என அவர் கூறினார். தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களுக்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சேயர்வில் நகரில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.