தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களாக சேலம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அவ்வப்போது பொதுமக்கள் வனத்துறையிடம் கூறி வந்துள்ளனர். இதனால் வனத்துறை அதிகாரிகள் கேமரா பொருத்தி சிறுத்தையை கண்காணித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை வந்து போவதற்கான தடையும் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில் ராமசாமி மலை, குண்டக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மேச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளையும், நாய்களையும் சிறுத்தை அடித்து சாப்பிடுவதை வழக்கமாய் கொண்டிருந்தது. பிறகு மீண்டும் கருவள்ளி ஊராட்சியைச் சார்ந்த கோம்பை கரடு பகுதியில் மாட்டை அடித்து கொன்று உள்ளது சிறுத்தை. இதனை தொடர்ந்து மேட்டூர் நங்கவள்ளி ஒன்றியத்திலும் சிறுத்தை நடமாட்டத்திற்கான தடையங்கள் கிடைத்தது.
இந்நிலையில் மேட்டூர் பகுதியில் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டுகள் அமைத்து ஒரு வார காலமாக சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை. இந்நிலையில் கடையம்பட்டி மற்றும் மேட்டூர் ஆகிய இரண்டு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தினை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனிடைய நேற்று முன்தினம் திருப்பத்தூரில் ஒரு பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை ஒற்றை பல மணி நேரம் போராடி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
சேலத்தில் நடமாடிய சிறுத்தைதான் திருப்பத்தூரில் பிடிபட்டதா என்றும் அதன் காலடி தடத்தை வனத்துறையினர் ஆராய்ந்து பார்த்தபோது இரண்டு இடங்களிலும் உள்ள சிறுத்தைகளின் தடயங்கள் வேறு வேறு என்று தற்பொழுது தெரிய வந்தது. மேலும் கடையம்பட்டியில் ஒன்று, மேட்டூரில் ஒன்று என சேலம் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சேலம் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.