
சேலம் மாநகராட்சி அதிமுக பகுதி செயலாளர் ஆகவும் முன்னால் மண்டல குழு தலைவராகவும் இருந்தவர் சண்முகம் (வயது 62). இவர் சேலம் பட்டி தாகூர் தெருவில் வசித்து வருகிறார்.
இவரது கட்சி அலுவலகம் தாத்தாகபட்டி அம்பாள் ஏரி ரோட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். அப்போது இவர் சஞ்சீவி ராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு வழியே சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் சண்முகத்தை சரமாரியாய் வெட்டி கொலை செய்து ஓடினார். இதை தொடர்ந்து சண்முகத்தின் உறவினர்கள் தாதகாப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி வலியுறுத்தினார். இது தொடர்பாக அன்னதானபட்டி காவல்துறையினர் வழக்கு தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனி படை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து முதல் கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட படுகொலை என்று தெரியவந்தது. சண்முகம் வீட்டிற்கு செல்லும் நேரத்தை சில நாட்களாகவே நோட்டமிட்டு சமயம் பார்த்து இந்த கொலையை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக சண்முகம் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களையும் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதையும் தொடர்ந்து பலமுறை கண்டித்து வந்ததோடு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கஞ்சா மற்றும் லாட்டரி கும்பலுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர் .மேலும் இந்த தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரை கைது செய்தனர். இந்நிலையில் சேலத்தில் அந்த சட்டவிரோத லாட்டரி கடைகளை இன்று மூடி இருந்தது குறிப்பிடத்தக்கது.