
கோவை சரவணம் பட்டியை சேர்ந்தவர்கள் பிரவீன் (வயது 25), அமர் நாத் (23), அஸ்வின்குமார் (24), பிரதீப் (22). இவர்களை திருட்டு வழக்கில் சரவணம்பட்டி போலீசார் கைது செய்து, கடந்த மே 1-ந் தேதி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 8-வது பிளாக்கில் இருந்த இவர்களை, நிர்வாக வசதிக்கு டவர் பிளாக்குக்கு சிறை நிர்வாகம் நேற்று முன்தினம் மாற்றியது. இதற்கு, கைதிகளின் நண்பர்களான சக கைதிகள் சோபன் (23), ராமன் (25), சங்கர் கணேஷ் (24), தீனா (24) ஆகியோர் நேற்று மதியம் 8-வது பிளாக் சுவர் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து டியூப் லைட்டுகளை உடைத்து, உடலில் கீறிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். சிறை கண்காணிப்பாளர் வினோத் (பொறுப்பு) பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக சிறை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.