சேலம் விரையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை..!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தமிழக முழுவதும் மாவட்டம் தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றார்.

இதனை தொடர்ச்சியாக இன்று காலை தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4 மணி அளவில் சேலம் ஒருங்கிணைந்த மாநகர் மாவட்டம் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் இரும்பாலை ரோடு, ரெட்டிபட்டி பிசிசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் மாநில தலைவர் செல்வ பெருந்தகை முன்னாள் மந்திரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்ற உள்ளனர். மேலும் கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்டறிந்து காங்கிரஸ் தலைவர் ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என்று ஏராளமானார் கலந்து கொள்ள உள்ளனர்.

Read Previous

யானை வழித்தட திட்ட வரவு அறிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்..!! டிடிவி தினகரன்..!!

Read Next

தமிழ்நாட்டை வெளுக்கப் போகும் கோடை மழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular