
நடிகை ரம்யா பாண்டியன் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ரா ரா ராஜசேகர் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆக இருந்தார். ஆனால் சில காரணங்களால் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
பின்னர் இயக்குனர் பாலாஜி சக்திவேல் பரிந்துரைப்படி ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பின்னர் ஆண் தேவதை திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்த நடிகை ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
அங்கு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தி இறுதி சுற்று வரை சென்றார். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு நடுவராக ரம்யா வந்தார். அதன் பிறகு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
ரம்யா பாண்டியன் மலையாளத்தில் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் மஞ்சள் நிற சேலையில் ரம்யா போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.
View this post on Instagram