தற்பொழுது சில காலமாகவே சென்னையில் சிறுவர்களை குறிவைத்து நாய்கள் தாக்கி வருகின்றது.
அந்த வகையில் சென்னையில் உள்ள புழல் ஆசிரியர் காலனி நான்காவது தெருவில் குடியிருப்பவர் ஜோஸ்வா டேனியல் .இவரின் மகன் கிளியோபாஸ் ஜெரால்ட் (வயது 12), இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தற்பொழுது கோடை விடுமுறை காரணத்தினால் வீட்டில் இருந்து வருகின்றார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜான் என்பவர் வெளிநாட்டு வகையான ராட்வீலர்,பாக்ஸர் ஆகிய நாய்களை வளர்த்து வருகின்றார்.
நேற்று மதியம் 3:30 மணியளவில் சிறுவர் ஜெரால்ட் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு மிதிவண்டியின் மூலம் சென்றுள்ளார். அந்த சமயம் ஜானின் மகனான 12 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் வளர்ப்பு நாய்களை நடை பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அச்சமயம் திடீரென ஆக்ரோஷமான இந்த வளர்ப்பு நாய்கள் ஜெரால்டை துரத்த சிறுவனால் நாயை கட்டுப்படுத்த இயலவில்லை இதனால் அவர் பிடியிலிருந்து பாய்ந்து ஓடிய நாய்கள் ஜெரால்டு மீது பாய்ந்து அவரை கடித்து குதறியது.
இதனால் சிறுவனின் காது, மார்பு, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு வந்த அவரின் தந்தை மகனை நாய்களை விரட்டி மீட்டனர். உடனடியாக ஆர்பிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க செய்யப்பட்ட சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தி முதன்மை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மாநகராட்சி அதிகாரிகள் இடம் உரிமையாளர்கள் உரிமம் வாங்காமல் ஜான் நாயை வளர்த்து வந்ததாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.