சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இந்த பொடியை குண பயன்படுத்தி பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

சைனஸ் பிரச்சனை தற்பொழுது பெரும்பாலானவரை பாதிக்கும் நோயாக வந்துவிட்டது. குறிப்பாக பனிக்காலத்தில் பலரும் இந்த பாதிப்பால் அவதிப்படுகின்றன.

சைனஸ் ஏன் உண்டாகிறது..?

 • குளிர்ச்சியான பானங்களை அருந்துதல்
 • அதிகமாக வெந்நீரில் குளித்தல்
 • அதிக மாசு அடைந்த காற்றை சுவாசித்தல்
 • இரவில் குளிர்ச்சியான நீரில் தலைக்கு குளித்தல்
 • குக்கரில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

சைனஸ் அறிகுறி

 • மேல் தாடை மற்றும் கீழ் தாடை இணையும் பகுதியில் வலி.
 • முகத்தில் வலி
 • மூக்கை சுற்றி வலி
 • மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி
 • வாய் மற்றும் நாசியில் சுவாசிக்கும் போது சுவாசத்தில் நாற்றம் ஏற்படுவதல்
 • காது மடல்களில் வலி உள்ளிட்டவைகள் சைனஸின் அறிகுறியாகும்.

சைனஸ் பாதிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருட்கள்

 1. அதிமதுரம்
 2. கண்டங்கத்திரி
 3. சித்தரத்தை
 4. ஆடாதொடை
 5. தாளிசப்பத்திரி
 6. திப்பிலி

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி ஆக்கி ஒரு டப்பாவில் சேமித்துக்கொள்ள வேண்டும், பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி இந்த பானத்தை அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அருந்தி வருவதால் சைனஸ், வறட்டு இருமல் , மூச்சிரைப்பு மற்றும் ஆஸ்துமா ஆகிய அனைத்து பாதிப்புகளும் குணம் அடையும்.

Read Previous

உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..? உடல் எடையை குறைக்கவும் எட்டு அற்புத வழிகள்..!!

Read Next

பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அசத்தல் நன்மைகள் இதோ.!பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அசத்தல் நன்மைகள் இதோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular