Oplus_131072
தேவையான பொருட்கள்
வெடக்கோழி – 1
சோயா சாஸ் -1 கப்
வினிகர் – அரை கப்
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
அஜினோ மோட்டோ – அரை தேக்கரண்டி
பல்லாரி வெங்காயம் – 2
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
கார்ன்பிளவர் – 3 மேஜைக்கரண்டி
மைதா – 2 மேஜைக்கரண்டி
பெரிப்பதற்கு டால்டா, உப்பு, மஞ்சள்-தேவையான அளவு.
செய்முறை
* முதலில் கோழியை எலும்புடன் சிறு சிறு உருண்டை துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சோயா சாஸ், வினிகர், அஜினோ மோடடோ, உப்பு, மஞ்சள் ஆகியவற்றின் கலவையில் கோழி துண்டுகளை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரில் போட்டு அரை வேக்காடு வேக வைக்க வேண்டும்.
* பின்னர் கார்ன் பிளவரையும், மைதா மாவையும் கலந்து அவற்றை தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.
* அதில் வேக வைக்கப்பட்ட கோழி துண்டுகளை போட வேண்டும்.
* அதன் பின்னர் கடாயில் டால்டாவை ஊற்றி, நன்றாக சூடானவுடன் அந்த கோழி துண்டுகளை போட்டு சிவப்பு நிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.இப்போது சுவையான சைனீஸ் சிக்கன் பிரை தயார்.




